Sunday, January 15, 2017

தமிழ்ப் பொழில் (1937-1938) துணர்: 13 - மலர்: 3

வணக்கம்.

துணர்: 13 - மலர்: 3  (1937-1938) வெளியீடான  தமிழ்ப் பொழில் இதழ்,
மின்னிதழாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பதின்மூன்றாம் ஆண்டு: (1937-1938)   துணர்: 13 - மலர்: 3

________________________________________________________________

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

1. திருவாசகத்தே "நமச் சிவாய வா அழ்க" என்ற அகவல் பாவின் ஆய்வு  (தொடர்ச்சி ...) - வே. மு. சீனிவாச முதலியார்
2. அடியேன் கருத்து - முத்து. சு. மாணிக்கவாசகன்
3. திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...) - K. சோமசுந்தரம் பிள்ளை
4. இன்றும் அன்றும் - சிதம்பரநாதன் செட்டியார்
5. தியாகராசர் கழிநெடில் - L. உலகநாதப்பிள்ளை
6. தியாகராஜர் பள்ளேசல் - L. உலகநாதப்பிள்ளை
7. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...) - ம. நா. சோமசுந்தரம் பிள்ளை


வாசிக்க இங்கே செல்க!


நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
________________________________________________

விரிவான உள்ளடக்கம் ...

1. திருவாசகத்தே "நமச் சிவாய வா அழ்க" என்ற அகவல் பாவின் ஆய்வு  (தொடர்ச்சி ...)
- வே. மு. சீனிவாச முதலியார்
[மாணிக்கவாசகர்  அருளிய திருவாசகத்தின்  "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்ற பாடல் 'அகவற்பா' வகையில் (கலிவெண்பா அல்ல)  அடங்கும் எனக் குறிப்பிட்டு இப்பாடலின் சரியான பொருளைக் காணும் ஆய்வினைத் தொடருகிறார்  வே. மு. சீனிவாச முதலியார். இந்தப் பதிவுடன் ஆய்வுக்கட்டுரை  நிறைவுறுகிறது.]

2. அடியேன் கருத்து
- முத்து. சு. மாணிக்கவாசகன்
[மேற்காணும் வே. மு. சீனிவாச முதலியார் அவர்களின் திருவாசகத்தே ‘‘நமச் சிவாய வா அழ்க ’’ என்ற அகவல் பாவின் ஆய்வு  என்ற கட்டுரைக்கு தனது மாற்றுக் கருத்தினை வைக்கிறார் முத்து. சு. மாணிக்கவாசகன் என்பார்.]

3. திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
- K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை  அவர்கள் வழங்கும் கட்டுரையிது.   இத்தொடர் கட்டுரையின் இப்பகுதியிலும் சென்ற இதழின் தொடர்ச்சியாக,  அரசர்க்குரிய செங்கோன்மை, ஒற்றாடல்  ஆகியன குறித்து  தொடர்கிறார். அதனை அடுத்து அமைச்சரின் கடன் குறித்து வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. இன்றும் அன்றும்
- சிதம்பரநாதன் செட்டியார்
["அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்" என்ற  பாரி மகளிர்(புறம், 112); "கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப், பாழ்செய் தனை" என்ற நெட்டிமையார் (புறம். 15); "கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப், பலிகண் மாறிய பாழ் படு பொதியில் நரை மூதாளர் நாயிடக் குழிந்த வல்லின் நல்லகம்" என்ற மருதன் இளநாகனார்(புறம். 56);  "உண்டென வுரையிற் கேட்பா ருயிருறு பாவ மெல்லாங் கண்டினித் தெளிக வென்று காட்டுவாள் போல வாகி" என்ற சீவகசிந்தாமணி பாடல்கள் போன்று இலக்கியம் காட்டும் வாழ்வின்  நிலையாமைக் கூறும், அன்றைய நிலையை இன்றைய நிலையுடன் ஒப்பிடும் பாடல்களை எடுத்துக்காட்டி இலக்கியச்சுவை விருந்து  படைக்கிறார்  சிதம்பரநாதன் செட்டியார்.]

5. தியாகராசர் கழிநெடில்
- L. உலகநாதப்பிள்ளை
[திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற கழிநெடில்.  இதை இயற்றியவர் கமலை ஞானப்பிரகாசர் எனக் கூறப்பட்டாலும் சான்றுகள் கிடைக்கவில்லை எனக் கூறி தியாகராசர் கழிநெடில்
பாடல்களைத் தருகிறார் L. உலகநாதப்பிள்ளை.]

6. தியாகராஜர் பள்ளேசல்
- L. உலகநாதப்பிள்ளை
[கமலை ஞானப்பிரகாசர் இயற்றிய உழத்திப்பாட்டு எனக் குறிப்பிடப்படும் பிரபந்த வகைகளில் ஒன்றான பள்ளுப்பாடலை அறிமுகப் படுத்துகிறார்  L. உலகநாதப்பிள்ளை.  உழவர்களின் பண்ணை வாழ்வு, மணிமுத்தாற்றின் நீர்வளம், நிலவளம் போன்ற செய்திகளுடன் பாட்டுடைத் தலைவர் தியாகராஜரின் பெருமையையும் கூறும் பாடல்கள் எனச் சிறுகுறிப்பாக அறிமுகப்படுத்துகிறார். இது அச்சில் ஏறாத நூல்களுள் ஒன்று. பாடல்கள் தொடரும்.]

7. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
- ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ... இத்தொடர் கட்டுரை நிறைவுறுகிறது.]

________________________________________________

No comments:

Post a Comment