ஆசீவகமே பண்டைத்தமிழர்களின் மெய்யியல் என்றும், அய்யனார் கோயில்கள் எல்லாம் அவற்றின் எச்சம் என்றும் பேரா. நெடுஞ்செழியன் அவர்களின் நூல்களைப் பின்பற்றிப் பலர் இன்று சமூக ஊடகங்களில் எழுதுவதைப் பார்க்கிறோம்.
ஆசீவகர்கள் பற்றி ஆர்த்தர் இலெ. பாஷம் எழுதிய "History And Doctrines Of Ajivikas" Arthur L Basham நூலையும்,
பேரா. ர. விஜயலட்சுமி எழுதிய "தமிழகத்தில் ஆசீவகர்கள்" என்ற நூலையும்
படித்தால் இத்தகைய கோட்பாடுகளைக் கறாராக எடைபோட முடியும். ஆசீவகர்களின் கோட்பாடு பற்றித் தமிழ்நூல்களில் தெளிந்து கொள்ள முடியும் அளவுக்குப் பிறமொழிகளில் இல்லை என்பது பேரா. விஜயலட்சுமி அவர்களின் கூற்று.
தொகுப்பு: மணி மணிவண்ணன்

________________________
1.
தமிழகத்தில் ஆசீவகர்கள்
ஆசிரியர் : விஜயலட்சுமி, ர.
பதிப்பாளர்: சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 1988
http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY2l0ty&tag= தமிழகத்தில்%20ஆசீவகர்கள்#book1/
&
&
தமிழகத்தில் ஆசீவகர்கள்
ர.விஜயலட்சுமி
கிழக்கு பதிப்பகம்-2019
₹ 200.00
தென்னாட்டில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், செப்பேடுகள், வரலாற்றுத் தடயங்கள், இலக்கியக் குறிப்புகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முனைவர் ர. விஜயலட்சுமி இந்நூலை எழுதியிருக்கிறார். தமிழ் மொழியில், இலக்கியத்தில், இலக்கணத்தில், வட்டார வழக்கில், தத்துவ விளக்கங்களில், பழமொழிகளில், சமய இலக்கியங்களில், நீதிநூல்களில் பொதிந்து கிடக்கும் ஆசீவகத்தின் கருத்துகளை ஆசிரியர் நமக்குத் தேடி அளித்திருப்பது தமிழ் மொழிக்கு அவர் செய்திருக்கும் ஓர் அரிய பங்களிப்பாகும். தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுடைய அனைவரும் படித்துப் பயனடையவேண்டிய நூல்.
2.
History and Doctrines of Ajivikas, AL Basham, 1951
3.
The Ajivikas, Beni Madhab Barua, 1920