Sunday, February 24, 2019

தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய ஆர்.முத்தையா



தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய ஆர்.முத்தையா (R.Muttiah) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டிக்குளியில் (1886) பிறந்தார். இவரது தந்தை ராமலிங்கம், ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவர். 7 வயதில் தந்தையையும், அதற்குப் பிறகு ஒருசில ஆண்டுகளில் தாயையும் இழந்தார்.
* உறவினர்களின் ஆதரவுடன் கலாசாலையில் பயின்றார். 21 வயதில் மலேசியா, சிங்கப்பூர் இணைந்த பகுதியான மலாயாவுக்கு சென்றார். அங்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. சிறிது காலம் பணியாற்றியவர், பிரபல வணிக நிறுவனத்தில் சேர்ந்தார்.
* அங்கு 1930 வரை பணிபுரிந்தார். இந்த காலக்கட்டத்தில் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவற்றை கற்றார். 1913-ல் ஸ்லோன் டுப்ளோயன் சர்வதேச சுருக்கெழுத்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
* தமிழ், ஆங்கில இலக்கியங்கள், கைத்தொழில் நூல்கள், சமய நூல்களைக் கற்றார். ஆங்கிலத்தில் இருப்பதுபோல தமிழில் தட்டச்சு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கருதினார். அதை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.
* தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் 4 வரிசைகளில் 46 விசைகளுக்குள் அடக்குவது சவாலாக இருந்தது. எனவே, பல எழுத்துகளுக்குப் பொதுவாக உள்ள குறியீடுகளை தனித்தனி விசைகளில் அமைத்தார். இரண்டு விசைகளை அழுத்திய பிறகே அச்சு நகர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ‘நகரா விசை’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.
* சிறந்த, எளிய உத்திகள் மூலமாக சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கினார். அதற்கு ‘ஸ்டாண்டர்டு தட்டச்சு’ என பெயரிட்டார். ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய 10 மடங்கு அதிக எழுத்துகள் கொண்ட தமிழ் மொழியை, தட்டச்சு இயந்திரத்துக்குள் அடக்கி, தமிழுக்கென பிரத்யேக தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றார்.
* விசைப் பலகையை உருவாக்கும் பணியை ஜெர்மன் நிறுவனத்திடம் ஒப்படைத்தார். பெரும் எண்ணிக்கையில் இறக்குமதி செய்து விற்பனை செய்தார். தட்டச்சு இயந்திரத்தில் சில குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்து, மேம்படுத்தினார்.
* ‘பிஜோ’, ‘ஐடியல்’ ஆகிய போர்ட்டபிள் தட்டச்சு இயந்திரங்களை உருவாக்கினார். இதை பின்பற்றி பல தட்டச்சு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பல மொழியினரும் தத்தம் மொழிகளில் தட்டச்சு சாதனங்களைத் தயாரிக்கத் தொடங்கினர்.
* இரு கைகளின் விரல்களுக்கும் சமமான வேலை இருந்தால்தான் தட்டச்சு செய்வது எளிதாக இருக்கும். இதை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப எழுத்துகளை சற்று இடம் மாற்றியமைத்தார். ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, தட்டச்சு தொழில்நுட்பத்தை மேம்படுத்தினார். இவர், சிறந்த சமூக சேவகரும்கூட. குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.
* தட்டச்சு இயந்திரங்கள் வழக்கொழிந்தாலும், கணினி வடிவில் தமிழ் தட்டச்சு விசைப் பலகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். ‘தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை’ என போற்றப்படும் ஆர்.முத்தையா இலங்கை வகுப்புக் கலவரங்கள் பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதினார். அந்த நூல் வெளிவருவதற்கு முன்பே காலமாகிவிட்டார்.


___________________
நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ்
ராஜலட்சுமி சிவலிங்கம்
24 Feb 2016

ref: https://tamil.thehindu.com/opinion/blogs/ஆர்முத்தையா-10/article8274700.ece



Wednesday, November 28, 2018

ஐராவதம் மகாதேவனின் ஆய்வுக் கட்டுரைகள்


1. Entropic Evidence for Linguistic Structure in the Indus Script, 2009:

2. Statistical Analysis of the Indus Script Using n-Grams, 2010:

3. A Markov model of the Indus script, 2009:

4. A statistical approach for pattern search in Indus writing, 2008

5. Entropy, the Indus script, and language: A reply to R. Sproat, 2010:

6. Aryan or dravidian or neither? a study of recent attempts to decipher the indus script (1995-2000), 2016

7. Segmentation of Indus texts, 2008





தொகுப்பு உதவி: திரு. பாலா. 

Monday, November 20, 2017

கோவிலூர் மடத்தின் நூல் மின்னாக்கம்


கோவிலூர் ஆண்டவர் நூலகத்தில்

(Koviloor Andavar Library https://archive.org/details/@koviloor_andavar_library?tab=uploads&)

கீழ்க்காணும் ஆசிரியர்களின் நூல்கள் இலவசமாக படிக்கக் கிடைக்கின்றன.


1    அ. இராமசுவாமி சுவாமிகள்
2    அ. இராமசுவாமிகள்
3    அ. இராமநாதன் செட்டியார்
4    அண்ணா
5    அநுகூலமாமுனிவர்
6    அப்பாசுவாமிகள்
7    அருட்கவி
8    அருணாசல சுவாமிகள்
9    அருணாசல நாயனார்
10    ஆதி சங்கரர்
11    ஆதி ஶ்ரீ சங்கர பகவத் பாதாள்
12    ஆரியன்
13    ஆர். எஸ். சர்மா
14    ஆர். டி. பி. இராமநாதன்
15    இறும்பூதூர் ஶ்ரீ தத்துவராய ஸ்வாமிகள்
16    ஓர் இந்து
17    ஓர் சாது
18    க. வ. திருவேங்கடநாயுடு
19    கண்டநல்லூர் நாகலிங்க சுவாமிகள்
20    கருணானந்த சுவாமி
21    கருணையானந்த ஞானபூபதிகள்
22    காசி நீலகண்ட சுவாமிகள்
23    காசிகாநந்த ஞாநாச்சார்ய ஸ்வாமிகள்
24    கி. லக்ஷ்மண சர்மா
25    கிருபானந்த வாரியார்
26    குப்புசாமி அய்யர்
27    குருசரணாலயன்
28    கேப்டன் எஸ்.பி. குட்டி
29    கொண்ணூர் லோகநாதமுதலியார்
30    கோ. வடிவேலு செட்டியார்
31    கோ.செங்கல்வராயராஜா
32    கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள்
33    கோயிலூர் முத்துராமலிங்க சுவாமிகள்
34    கோவிலூர் - காசிகானந்த சுவாமிகள்
35    கோவிலூர் ஆண்டவர் நூலகம்
36    கோவிலூர் பிரம்மஶ்ரீ அ. இராமசாமி சுவாமிகள்
37    கோவிலூர் மகா. கோவிந்தசுவாமிகள்
38    கோவிலூர் மடாலயம் மஹாதேவ ஞான தேசிகர்
39    கோவிலூர் ஶ்ரீ சுப்பய்ய சுவாமிகள்
40    சந்திரசேகர சுவாமிகள்
41    சரவணப் பெருமாள்
42    சாது - நித்தியானந்தம்மாள்
43    சாது ஶ்ரீ நிச்சலதாஸர்
44    சி. சுப்பைய சுவாமிகள்
45    சிதம்பர சுவாமிகள்
46    சிதம்பர ஞான தேசிக சுவாமிகள்
47    சிதம்பரம் சண்முக சுவாமிகள்
48    சிவப்பிரகாச சுவாமிகள்
49    சிவானந்த மூர்த்தி
50    சுத்த அத்வைதி அருட்கவி ஶ்ரீ விலக்ஷணானந்த ஸ்வாமிகள்
51    சுந்தரேச அத்ரேயன்
52    சுப்பிரமணிய சாஸ்திரிகள்
53    சுப்பிரமணியதீக்ஷிதர்
54    சுப்பைய சுவாமிகள்
55    சுவாமி ஆத்மானந்தா
56    செம்பை வீ. ஆறுமுகனார்
57    செள. பாலசரஸ்வதி தேவகுஞ்சரியம்மாள்
58    சேவு. பழ. பழநியப்ப அய்யா
59    சேஷாத்திரி சிவனார்
60    சொரூபாநந்தபரதேசி
61    சோமசுந்தரஞான தேசிகர்
62    டாக்டர் கே.எம்.பி. முகம்மது காசிம்
63    டாக்டர் டி. எம். பி. மஹாதேவன்
64    டாக்டர் வி. எ. தேவசேனாபதி
65    டி. கோபால் நாயகர்
66    தண்டபாணி சுவாமிகள்
67    தத்துவராய சுவாமிகள்
68    தமிழாக்கம்: பேராசிரியர். திரு. ப. உருத்திரமணி
69    தவத்திரு குமரகுரு சுவாமிகள்
70    தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
71    தவத்திரு நித்தியானந்த சுவாமிகள்
72    தவத்திரு. சாந்தலிங்க அடிகளார்
73    தளவாய் ராமசாமி முதலியார் உரை
74    தாண்டவராய சுவாமிகள்
75    திரு வரதராஜன்
76    திரு வேங்கடநாதர்
77    திருத்தேவர் பழநியப்ப கவுண்டர்
78    திருநெல்வேலிக்கோடகநல்லூர் ஶ்ரீ சுந்தர சுவாமிகள்
79    திருப்போரூர் தவத்திரு. சிதம்பர சுவாமிகள்
80    திருவாவடுதுறைச் சிவஞானசுவாமிகள்
81    திருவாளர். வரதராசு நாயகர்
82    திருவிடைமருதூர் ப்ரம்மஶ்ரீ பிச்சுசாஸ்திரிய சுவாமிகள்
83    திருவேங்கடநாதர்
84    துவிதமததிரஸ்காரி
85    துறைமங்கலம் ஶ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்
86    தூத்துக்குடி முத்தைய பிள்ளை
87    ந. சுப்ரமணிய அய்யர்
88    நன்னிலம் ஶ்ரீ சதானந்த சுவாமிகள்
89    நா. கதிரைவேற்பிள்ளை
90    நா. பெ. நா. முத்துராமய்யா
91    நிஜகுணயோகீச்சுவரர்
92    பரம பூஜ்யஶ்ரீ ஸ்வாமீ பரமார்த்தாநந்தர்
93    பரூர்-சேஷகிரி அய்யங்கார்
94    பள்ளத்தூர் மு.ராம.சொ.ராம. முத்துவீரப்பய்யா
95    பாநுகவி
96    பிரம ஶ்ரீ பிரஹமாநந்த சுவாமிகள்
97    பிரமக்ஞான வெங்கிடேசுர சுவாமிகள்
98    பிரம்மஶ்ரீ கெ. எஸ். சுப்பராயர்
99    பிரஹ்மஶ்ரீ
100    பிறைசை அருணாசல சுவாமிகள்
101    பிறையாறு அருணாசல சுவாமிகள்
102    பெ. பார்த்தசாரதி அய்யங்கார்
103    பெ. மாணிக்கசாமி முதலியார்
104    பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
105    பொன்னம்பல சுவாமிகள்
106    போரூர் தவத்திரு சிதம்பர சுவாமிகள்
107    ப்ரம்மஶ்ரீ பிச்சுசாஸ்திரிய சுவாமிகள்
108    ம. ராஜகோபால் பிள்ளை
109    மகா. கோவிந்த சுவாமி
110    மஹேஸ்வரானந்தகிரி சுவாமிகள்
111    முனியப்ப முதலியார்
112    முனியப்பசுவாமிகள்
113    மூலச் சந்திர ஞாநி
114    யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர்
115    ராம.சொ. சொக்கலிங்க செட்டியார்
116    ராமசிவம்
117    வி. ஆறுமுகஞ்சேர்வை
118    வி. எம். கோவிந்தராஜுலு நாயுடு
119    வித்வான் கா. இராமசாமி நாயுடு
120    வியாச மகாரிஷி
121    வீரை ஆளவந்தார்
122    வெ. குப்புஸ்வாமி ராஜூ
123    வெ. குப்புஸ்வாமிராஜு
124    ஜவகர் சுவாமிகள்
125    ஸத்குரு ஶ்ரீஶ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள்
126    ஸ்ரீ கோயிலூர் பொன்னம்பலசுவாமிகள்
127    ஸ்ரீ நித்தியானந்த முனிவர்
128    ஸ்ரீ வீர சுப்பய்யஞான தேசிகேந்திர சுவாமிகள்
129    ஸ்வாமி நித்யாநந்தம்
130    ஶ்ரீ அண்ணாமலை ஞாந தேசிக சுவாமிகள்
131    ஶ்ரீ அப்பய்ய தீக்ஷிதர்
132    ஶ்ரீ அருணாசலஞானதேசி ஸ்வாமிகள்
133    ஶ்ரீ ஆதி சங்கராசாரியர்
134    ஶ்ரீ ஆத்துமாநந்த சுவாமிகள்
135    ஶ்ரீ ஆநந்த போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
136    ஶ்ரீ இராமசுவாமி
137    ஶ்ரீ உலகநாத சுவாமிகள்
138    ஶ்ரீ ஐயண்ண தீக்ஷிதர்
139    ஶ்ரீ காசிகாநநந்த சுவாமிகள்
140    ஶ்ரீ காசிகாநந்த சுவாமிகள்
141    ஶ்ரீ காசிகாநந்த ஞாநாசாரிய சுவாமிகள்
142    ஶ்ரீ குமார தேவ சுவாமிகள்
143    ஶ்ரீ குமாரதேவ சுவாமிகள்
144    ஶ்ரீ கோயிலூர் பொன்னம்பல சுவாமிகள்
145    ஶ்ரீ கோவிலூர் சங்கரானந்த சுவாமிகள்
146    ஶ்ரீ சங்கர பூஜ்ய பகவத் பாதாசாரிய சுவாமிகள்
147    ஶ்ரீ சங்கரகிங்கரசரணசேகரன் சிவாநந்தன்
148    ஶ்ரீ சங்கரபகவத்பாதர்
149    ஶ்ரீ சங்கரபூஜ்ய பகவத்பாத ஆசாரிய சுவாமிகள்
150    ஶ்ரீ சங்கராசாரியார் சுவாமிகள்
151    ஶ்ரீ சதானந்த பரமஹம்ஸ பரிவ்ராஜக ஆசாரியர்
152    ஶ்ரீ சாந்ட்க லிங்க சுவாமிகள்
153    ஶ்ரீ சாந்தலிங்க சுவாமிகள்
154    ஶ்ரீ சி. என். ஆதிசேஷ ஐயர்
155    ஶ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி
156    ஶ்ரீ சித. நீலகண்ட சுவாமிகள்
157    ஶ்ரீ சிதம்பர சுவாமிகள்
158    ஶ்ரீ சிதம்பர ஞாந தேசிக சுவாமிகள்
159    ஶ்ரீ சிதம்பர ஞானதேசிக சுவாமிகள்
160    ஶ்ரீ சிதம்பரசுவாமிகள்
161    ஶ்ரீ சிதம்பரம் ஶ்ரீ பொன்னம்பலசுவாமிகள் மாணாகர்களுள் ஒருவர்
162    ஶ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்
163    ஶ்ரீ சிவானந்த சுவாமிகள்
164    ஶ்ரீ சுந்தர சுவாமிகள்
165    ஶ்ரீ சுப்பய்ய ஞானதேசிகேந்திர சுவாமிகள்
166    ஶ்ரீ சுப்பைய சுவாமிகள்
167    ஶ்ரீ சுப்பைய ஞாந தேசிகர்
168    ஶ்ரீ சுப்பைய்ய சுவாமிகள்
169    ஶ்ரீ சுரேஸ்வராசாரியார்
170    ஶ்ரீ சுவாமி சாரதானந்தா
171    ஶ்ரீ சுவாமி சிவானந்தா
172    ஶ்ரீ சேஷாத்திரி சிவனார்
173    ஶ்ரீ சோம தேவ பட்டர்
174    ஶ்ரீ ஞானானந்த ஸ்வாமிகள்
175    ஶ்ரீ தத்துவராய சுவாமிகள்
176    ஶ்ரீ தத்வராய சுவாமிகள்
177    ஶ்ரீ தர்ம ராஜ தீக்ஷிதர்
178    ஶ்ரீ தாண்டவராய சுவாமிகள்
179    ஶ்ரீ திரு வேங்கடநாதர்
180    ஶ்ரீ தோடகாசிரியர்
181    ஶ்ரீ நிச்சல தாசர்
182    ஶ்ரீ நித்யானந்த சுவாமிகள்
183    ஶ்ரீ நிஜ குண யோகீசுவரர்
184    ஶ்ரீ பகவத்
185    ஶ்ரீ பாரதி தீர்த்த வித்தியாரண்ய சுவாமிகள்
186    ஶ்ரீ பிரகாசாநந்த சுவாமிகள்
187    ஶ்ரீ பிரம்மானந்த சுவாமிகள்
188    ஶ்ரீ பொன்னம்பல சுவாமிகள்
189    ஶ்ரீ பொன்னம்பல ஞாநதேசிகர்
190    ஶ்ரீ மகா. கோவிந்த சுவாமிகள்
191    ஶ்ரீ மஹாதேவ ஞாநதேசிக ஸ்வாமிகள்
192    ஶ்ரீ ரமணமகரிஷி
193    ஶ்ரீ வ. அ. தியாகராஜன்
194    ஶ்ரீ வா. சரவணமுத்து பிள்ளை
195    ஶ்ரீ வி. பிரஹ்மாநந்த ஸ்வாமிகள்
196    ஶ்ரீ வித்தியாரண்ய சுவாமிகள்
197    ஶ்ரீ வெ. குப்புஸ்வாமி ராஜு
198    ஶ்ரீ வெ. குப்புஸ்வாமி ராஜு (ஶ்ரீ ப்ரஹ்மானந்த ஸ்வாமிகள்)
199    ஶ்ரீ ஸச்சிதானந்தேந்திர ஸரஸ்வதி சுவாமிகள்
200    ஶ்ரீ ஸ்வயம்பிரகாச யதிகள்
201    ஶ்ரீமது சி. சுப்பைய சுவாமிகள்
202    ஶ்ரீமத் ஆத்துமாநந்த சுவாமிகள்
203    ஶ்ரீமத் கோ. வடிவேலு செட்டியார்
204    ஶ்ரீமத் சங்கரபூஜ்ய பகவத்பாத ஆசாரிய சுவாமிகள்
205    ஶ்ரீமத் சித்கனானந்தகிரி சுவாமி
206    ஶ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
207    ஶ்ரீமத் சேஷாத்திரி சிவனார்
208    ஶ்ரீமத் பரமஹம்ஸ சிருங்கேரி ஶ்ரீ பிரும்மவித்யாநந்த நாத பாரதி
209    ஶ்ரீமத் ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார்
210    ஶ்ரீமாந் - இராமயோகி
211    ஶ்ரீமான்
212    ஶ்ரீலஶ்ரீ ஆத்துமாநந்த சுவாமிகள்
213    ஶ்ரீலஶ்ரீ இராமசமி ஞான தேசிக சுவாமிகள்
214    ஶ்ரீலஶ்ரீ இராமஸ்வாமி ஐயா
215    ஶ்ரீலஶ்ரீ காசிகாநந்த ஞாநாசார்ய ஸ்வாமிகள்
216    ஶ்ரீலஶ்ரீ சிவகுமார மெளனகுரு சுவாமி
217    ஶ்ரீலஶ்ரீ சிவாநந்த ஸ்வாமிகள்
218    ஶ்ரீலஶ்ரீ சுவாமி வாசுதேவானந்தா
219    ஶ்ரீலஶ்ரீ பிரஹ்மாநந்த சுவாமிகள்
220    ஶ்ரீலஶ்ரீ பொன்னம்பல ஸ்வாமிகள்
221    ஶ்ரீலஶ்ரீ வேதாந்த ஞானதேசிக அத்வைதானந்த சுவாமி
222    ஶ்ரீவீர
223    bhartrhari
224    k. narayanaswami aiyar and r. sundareswara sastri
225    m. arunachalam

Sunday, January 15, 2017

தமிழ்ப் பொழில் (1937-1938) துணர்: 13 - மலர்: 3

வணக்கம்.

துணர்: 13 - மலர்: 3  (1937-1938) வெளியீடான  தமிழ்ப் பொழில் இதழ்,
மின்னிதழாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பதின்மூன்றாம் ஆண்டு: (1937-1938)   துணர்: 13 - மலர்: 3

________________________________________________________________

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

1. திருவாசகத்தே "நமச் சிவாய வா அழ்க" என்ற அகவல் பாவின் ஆய்வு  (தொடர்ச்சி ...) - வே. மு. சீனிவாச முதலியார்
2. அடியேன் கருத்து - முத்து. சு. மாணிக்கவாசகன்
3. திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...) - K. சோமசுந்தரம் பிள்ளை
4. இன்றும் அன்றும் - சிதம்பரநாதன் செட்டியார்
5. தியாகராசர் கழிநெடில் - L. உலகநாதப்பிள்ளை
6. தியாகராஜர் பள்ளேசல் - L. உலகநாதப்பிள்ளை
7. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...) - ம. நா. சோமசுந்தரம் பிள்ளை


வாசிக்க இங்கே செல்க!


நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
________________________________________________

விரிவான உள்ளடக்கம் ...

1. திருவாசகத்தே "நமச் சிவாய வா அழ்க" என்ற அகவல் பாவின் ஆய்வு  (தொடர்ச்சி ...)
- வே. மு. சீனிவாச முதலியார்
[மாணிக்கவாசகர்  அருளிய திருவாசகத்தின்  "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்ற பாடல் 'அகவற்பா' வகையில் (கலிவெண்பா அல்ல)  அடங்கும் எனக் குறிப்பிட்டு இப்பாடலின் சரியான பொருளைக் காணும் ஆய்வினைத் தொடருகிறார்  வே. மு. சீனிவாச முதலியார். இந்தப் பதிவுடன் ஆய்வுக்கட்டுரை  நிறைவுறுகிறது.]

2. அடியேன் கருத்து
- முத்து. சு. மாணிக்கவாசகன்
[மேற்காணும் வே. மு. சீனிவாச முதலியார் அவர்களின் திருவாசகத்தே ‘‘நமச் சிவாய வா அழ்க ’’ என்ற அகவல் பாவின் ஆய்வு  என்ற கட்டுரைக்கு தனது மாற்றுக் கருத்தினை வைக்கிறார் முத்து. சு. மாணிக்கவாசகன் என்பார்.]

3. திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
- K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை  அவர்கள் வழங்கும் கட்டுரையிது.   இத்தொடர் கட்டுரையின் இப்பகுதியிலும் சென்ற இதழின் தொடர்ச்சியாக,  அரசர்க்குரிய செங்கோன்மை, ஒற்றாடல்  ஆகியன குறித்து  தொடர்கிறார். அதனை அடுத்து அமைச்சரின் கடன் குறித்து வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. இன்றும் அன்றும்
- சிதம்பரநாதன் செட்டியார்
["அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்" என்ற  பாரி மகளிர்(புறம், 112); "கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப், பாழ்செய் தனை" என்ற நெட்டிமையார் (புறம். 15); "கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப், பலிகண் மாறிய பாழ் படு பொதியில் நரை மூதாளர் நாயிடக் குழிந்த வல்லின் நல்லகம்" என்ற மருதன் இளநாகனார்(புறம். 56);  "உண்டென வுரையிற் கேட்பா ருயிருறு பாவ மெல்லாங் கண்டினித் தெளிக வென்று காட்டுவாள் போல வாகி" என்ற சீவகசிந்தாமணி பாடல்கள் போன்று இலக்கியம் காட்டும் வாழ்வின்  நிலையாமைக் கூறும், அன்றைய நிலையை இன்றைய நிலையுடன் ஒப்பிடும் பாடல்களை எடுத்துக்காட்டி இலக்கியச்சுவை விருந்து  படைக்கிறார்  சிதம்பரநாதன் செட்டியார்.]

5. தியாகராசர் கழிநெடில்
- L. உலகநாதப்பிள்ளை
[திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற கழிநெடில்.  இதை இயற்றியவர் கமலை ஞானப்பிரகாசர் எனக் கூறப்பட்டாலும் சான்றுகள் கிடைக்கவில்லை எனக் கூறி தியாகராசர் கழிநெடில்
பாடல்களைத் தருகிறார் L. உலகநாதப்பிள்ளை.]

6. தியாகராஜர் பள்ளேசல்
- L. உலகநாதப்பிள்ளை
[கமலை ஞானப்பிரகாசர் இயற்றிய உழத்திப்பாட்டு எனக் குறிப்பிடப்படும் பிரபந்த வகைகளில் ஒன்றான பள்ளுப்பாடலை அறிமுகப் படுத்துகிறார்  L. உலகநாதப்பிள்ளை.  உழவர்களின் பண்ணை வாழ்வு, மணிமுத்தாற்றின் நீர்வளம், நிலவளம் போன்ற செய்திகளுடன் பாட்டுடைத் தலைவர் தியாகராஜரின் பெருமையையும் கூறும் பாடல்கள் எனச் சிறுகுறிப்பாக அறிமுகப்படுத்துகிறார். இது அச்சில் ஏறாத நூல்களுள் ஒன்று. பாடல்கள் தொடரும்.]

7. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
- ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ... இத்தொடர் கட்டுரை நிறைவுறுகிறது.]

________________________________________________

Sunday, January 1, 2017

தமிழ்ப் பொழில் (1937-1938) துணர்: 13 - மலர்: 2

வணக்கம்.

துணர்: 13 - மலர்: 2  (1937-1938) வெளியீடான  தமிழ்ப் பொழில் இதழ்,
மின்னிதழாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பதின்மூன்றாம் ஆண்டு: (1937-1938)   துணர்: 13 - மலர்: 2
________________________________________________________________

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

1. 'கபிலர்' என்னும் நூலின் ஆராய்ச்சி - ந. மு. வேங்கடசாமி நாட்டார்
2. வடநாடு சென்ற தமிழரசர் காலம் (தொடர்ச்சி ...) - மா. இராசமாணிக்கம்
3. தென்பாண்டி நாடும் -- கொற்கை மாநகரமும் (தொடர்ச்சி ...) - சி. கு. நாராயணசாமி முதலியார்
4. ஊண் பித்தியார் - சி. கு. நாராயணசாமி முதலியார்
5.  திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...) - K. சோமசுந்தரம் பிள்ளை
6. திருவாசகத்தே ‘‘நமச் சிவாய வா அழ்க ’’ என்ற அகவல் பாவின் ஆய்வு  (தொடர்ச்சி ...) - வே. மு. சீனிவாச முதலியார்
7. தமிழ்ச் செய்திகள் - இதழாசிரியர்
8. நூல் மதிப்புரை -  இதழாசிரியர்

வாசிக்க இங்கே செல்க!


நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
________________________________________________

விரிவான உள்ளடக்கம் ...

1. 'கபிலர்' என்னும் நூலின் ஆராய்ச்சி
- ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[வித்துவான் வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதி, சென்னைப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட 'கபிலர்' என்னும் உரைநூல் குறித்த மதிப்புரையை வழங்குகிறார் ந. மு. வேங்கடசாமி நாட்டார்.  வேங்கடசாமி நாட்டார் அவர்களும் இதற்கு முன்னரே 'கபிலர்' என்னும் உரைநூல் வெளியிட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  வேங்கடராஜுலு ரெட்டியார் தமிழில் வழக்கத்தில் இல்லாத (முகித்தல், அங்கனம், காண்கின்றது, நற்கீரர்) சொற்களைத் தனது நூலில் கையாண்டது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 'மரபு நிலை திரியிற் பிறிது பிறிதாகும்' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தை மேற்கோள் காட்டி,  இதனை மரபு நிலை திரித்துப் பொருளுணர்ச்சிக்கு  ஊறு செய்யும் ஒரு  செயலாகக் காண்கிறார்.  விரிவான இலக்கண விளக்கமளிப்பதுடன்,  நினைத்தபடி எல்லாம் சொல்லின் உருவை மாற்றினால் அது தமிழன்று, அது பிறிதொரு மொழியாகிவிடும் என்று அறிவுறுத்துகிறார்.]

2. வடநாடு சென்ற தமிழரசர் காலம் (தொடர்ச்சி ...)
- மா. இராசமாணிக்கம்
[கரிகால் சோழன், நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய தமிழ் மன்னர்கள்  ஆரிய மன்னரை வென்று மீண்டதாகத் தமிழிலக்கியங்கள் கூறுகின்றன.  இவர்கள் வடநாடு சென்றிருந்தால் அவர்கள் சென்ற காலம் எதுவாக இருக்கலாம் என ஆராய முற்படுகிறார் கட்டுரை ஆசிரியர். முன்னர்  சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம் கி.பி. 166-193 க்கு இடைப்பட்டக் காலமாக இருத்தல் வேண்டும் என்று குறிப்பிட்டார் மா. இராசமாணிக்கனார்.

இப்பகுதியில்  கரிகாலன் வடநாடு சென்ற காலத்தைக் கணிக்கிறார். சங்க நூல்களில் இரு கரிகாலன்கள் கூறப்படுகின்றனர்.  வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில், இவர்களுள்  வடநாடு சென்ற கரிகாலன் பிற்காலத்தவன், (இவன் நெடுஞ்சேரலாதனைத் தோற்கடித்த கரிகாலன் அல்லன்; அவன் முற்காலத்தவன்.  இதற்கு K. N.சிவராஜ பிள்ளையின் நூலில் இருந்து சான்று கொடுக்கிறார், அந்த  நூலின் சுட்டியும்  இணைக்கப்பட்டுள்ளது, காண்க). இச்சோழன்  வடநாடு சென்ற காலம்...கி.மு. முதல் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம்.  இக்காலகட்டத்தில் சோழன் ஒருவன் இலங்கையின் மீது படையெடுத்துச் சென்றதை இலங்கையின் மகாவம்சம் நூலில் இருந்தும் அறியலாம். கரிகாலன் இலங்கைப் போரின்  முடிவில் கைதிகளைக் கொணர்ந்தவன் என்பதும் வரலாறு.  எனவே,  உத்தேசமாகக் கரிகாலன் வடநாடு சென்ற காலம்  கி.மு. 60-கி.மு. 20 இடைப்பட்டக் காலமாக இருத்தல் வேண்டும்  என்ற முடிவுக்கு வருகிறார். இது ஒரு தொடர் கட்டுரை. இனி தொடர இருப்பது  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வடநாடு சென்ற காலம் குறித்த  ஆய்வு.
Chronology Of The Early Tamils, K. N. SIVARAJA PILLAI, B.A. 1932
https://archive.org/stream/chronologyofthee035104mbp#page/n113/mode/2up (see pp.91-94)]

3. தென்பாண்டி நாடும் -- கொற்கை மாநகரமும் (தொடர்ச்சி ...)
- சி. கு. நாராயணசாமி முதலியார்
[பாண்டிய மன்னர்களின் "கொற்கையம் பெருந்துறை"  என்றழைக்கப் பட்ட சிறப்புமிக்க  துறைமுகமாகவும் மற்றொரு  தலைநகராகவும்  விளங்கிய  "கொற்கை மாநகர்" குறித்த வரலாற்றுத் தகவல்களும், கொற்கையை ஆண்ட பாண்டிய  மன்னர்கள், கொற்கையின் முத்துக்கள்  குறித்து சங்க இலக்கியங்கள் முதல் குமரகுருபரர் வரை புலவர்கள் பாடிச்சென்ற செய்திகளையும், அயல்நாட்டு நூல்கள் தரும் செய்திகளையும் தொகுத்து வழங்குகிறார் நாராயணசாமி முதலியார்.

சடையவர்மன் பராக்கிரம  குலசேகர பாண்டியன் காலமான கி.பி.1552 ஆம் ஆண்டு வரை பாண்டியர்களின் அரசிருக்கையாக விளங்கிய  கொற்கை, அதன் பின்னர் ஏற்பட்ட அழிவுகளால் கைவிடப்பட்டது.  பிறகு,   கி.பி. 1588 இல் முடிசூட்டப்பட்ட   குலசேகர பாண்டியனின் இரண்டாவது மகனான  வரதுங்கராம பாண்டிய மன்னனின் அரசிருக்கையாக கரிவலம் வந்த நல்லூர் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  பண்டைய  அயல்நாட்டு வரலாற்றுப் பயண நூலாசிரியர்களும் தங்கள் நூலில் குறிப்பிட்ட கொற்கையின் சிறப்பை அறிய,   கொற்கைக்கு  அருகிருக்கும் ஊர்களான   ஆதிச்ச நல்லூர், கொட்டாரம், மணப்படை, அக்கசாலை போன்ற இடங்களில் அரசு அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு தமிழரின் வரலாற்றை வெளிக்கொணர விருப்பம் தெரிவிக்கிறார்   சி. கு. நாராயணசாமி முதலியார், இத்தொடர் கட்டுரை நிறைவுற்றது.]

4. ஊண் பித்தியார்
- சி. கு. நாராயணசாமி முதலியார்
[சங்ககாலத்து நல்லிசைப் புலமை மெல்லியலார் என்றும், ஊர்ப்பித்தியார் அல்லது ஊண் பித்தியார் என அழைக்கப்படும் இப்பெண்பாற் புலவரின் இயற்பெயர் 'பித்தியார்' என்பதாகும். குறுந்தொகை 232, புறநானூறு 251, 252 இவரால் பாடப் பெற்றதாக அறியப்படுகின்றன. இவரது பாடல்கள் குறித்தும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் 'தாபதவாகை'க்கு இவரது புறப்பாடல்களை எடுத்துக்காட்டாகக் கொள்வதையும் அறியத் தருகிறார்  சி. கு. நாராயணசாமி முதலியார்.]

5.  திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
- K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை  அவர்கள் வழங்கும் கட்டுரையிது.   இத்தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  இல்லறம், அரசர்க்குரிய செங்கோன்மை, ஒற்றாடல்  ஆகியன குறித்து  வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. திருவாசகத்தே ‘‘நமச் சிவாய வா அழ்க ’’ என்ற அகவல் பாவின் ஆய்வு  (தொடர்ச்சி ...)
- வே. மு. சீனிவாச முதலியார்
[மாணிக்கவாசகர்  அருளிய திருவாசகத்தின்  "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்ற பாடல் 'அகவற்பா' வகையில் (கலிவெண்பா அல்ல)  அடங்கும் எனக் குறிப்பிட்டு இப்பாடலின் சரியான பொருளைக் காணும் ஆய்வினைத் தொடருகிறார்  வே. மு. சீனிவாச முதலியார் . இந்த ஆய்வுக்கட்டுரை  ஒரு தொடர் கட்டுரை.]

7. தமிழ்ச் செய்திகள் - இதழாசிரியர்
[ஜெர்மனியின் பெர்லின் நகரில், இந்து மாணவர் கழகத்தாரால்,  மே 10, 1937 அன்று திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது. பெர்லின் பல்கலைக்கழக சொற்பொழிவாளர் Dr. H. Beythan என்பார் 'தமிழ் இலக்கியத்தில் முற்றோற்றம்' என்ற திருக்குறள் குறித்த  உரையை வழங்கினார்.
(German missionary Dr. Hermann Beythan ஒரு தமிழ் இலக்கண  நூலும் வெளியிட்டுள்ளார், ஜெர்மானிய வானொலியின் முதல் தமிழ் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்ட பொழுது அறிவிப்பாளராகவும் பொறுப்பேற்றிருந்தார் என்பது இணையத்தில் பெற்ற  தகவல் -
http://rs5hiland.blogspot.com/2015_06_01_archive.html 
http://madrasmusings.com/Vol%2018%20No%2026/tamil-studies-in-germany.html;
Hermann Beythan (known in India as Peytan Castiriyar, who closely worked with the noted Tamil scholar Me.Vi. Venuko pala Pillai in Madras). He was a lecturer at the Institut Fuer Auslandskunde in Berlin and author of a detailed grammar of Tamil published in 1943 at the height of World War II.). ]

8. நூல் மதிப்புரை -  இதழாசிரியர்
[தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், இராவ்சாகிப்  V.P. சுப்பிரமணி முதலியார் அவர்கள் உரை எழுதிய, 'கம்பராமாயண சாரம்:  அயோத்தியா காண்டம்'  நூலை வெளியிட்டது பாராட்டப் படுகிறது.]

________________________________________________

Sunday, December 18, 2016

தமிழ்ப் பொழில் (1937-1938) துணர்: 13 - மலர்: 1

வணக்கம்.

துணர்: 13 - மலர்: 1  (1937-1938) வெளியீடான  தமிழ்ப் பொழில் இதழ்,
மின்னிதழாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பதின்மூன்றாம் ஆண்டு: (1937-1938)   துணர்: 13 - மலர்: 1

________________________________________________________________

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

1. தென்பாண்டி நாடும் -- கொற்கை மாநகரமும் - சி. கு. நாராயணசாமி முதலியார்
2. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...) - ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
3. தில்லையுலா - L. உலகநாத பிள்ளை
4. வடநாடு சென்ற தமிழரசர் காலம் - மா. இராசமாணிக்கம்
5. தமிழ்ச் செய்திகள் - இதழாசிரியர்
6. நூல் மதிப்புரை -  இதழாசிரியர்
7. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகளுக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம் -  இதழாசிரியர்

வாசிக்க இங்கே செல்க!


நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
________________________________________________

விரிவான உள்ளடக்கம் ...

1. தென்பாண்டி நாடும் -- கொற்கை மாநகரமும்
சி. கு. நாராயணசாமி முதலியார்
[பாண்டிய மன்னர்களின் "கொற்கையம் பெருந்துறை"  என்றழைக்கப் பட்ட சிறப்புமிக்க  துறைமுகமாகவும் மற்றொரு  தலைநகராகவும்  விளங்கிய  "கொற்கை மாநகர்" குறித்த வரலாற்றுத் தகவல்களும், கொற்கையை ஆண்ட பாண்டிய  மன்னர்கள், கொற்கையின் முத்துக்கள்  குறித்து சங்க இலக்கியங்கள் முதல் குமரகுருபரர் வரை புலவர்கள் பாடிச்சென்ற செய்திகளையும், அயல்நாட்டு நூல்கள் தரும் செய்திகளையும் தொகுத்து வழங்குகிறார் நாராயணசாமி முதலியார்.  இது ஒரு தொடர் கட்டுரை].

2. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ... இது ஒரு தொடர் கட்டுரை].

3. தில்லையுலா (தொடர்ச்சி ...)
L. உலகநாத பிள்ளை
[தில்லை நடராஜரின் திருவீதி உலாவில் ஆடலரசனைக் கண்டு ஏழுவகை  வயத்துப்பிரிவு மகளிரும் சிவன் மீது கொண்ட காதலை விளக்கும், பிரபந்த வகைகளில் ஒன்றான உலா பாடல்கள்.  ஆசிரியர் பெயர் அறியக்கூடவில்லை.  வேறுபிரதிகளும் ஒப்புநோக்கக் கிடைக்காத பொழுது, கிடைத்த பாடல்கள் செல்லரித்துப் போகும் முன்னர் பாதுகாக்கும் நோக்கில் இதுவரை அச்சில் ஏறாத இந்த தில்லையுலா பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது, இப்பகுதி தொடரும்]

4. வடநாடு சென்ற தமிழரசர் காலம்
மா. இராசமாணிக்கம்
[கரிகால் சோழன், நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய தமிழ் மன்னர்கள்  ஆரிய மன்னரை வென்று மீண்டதாகத் தமிழிலக்கியங்கள் கூறுகின்றன.  இவர்கள் வடநாடு சென்றிருந்தால் அவர்கள் சென்ற காலம் எதுவாக இருக்கலாம் என ஆராய முற்படுகிறார் கட்டுரை ஆசிரியர்.  வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில் சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம் கி.பி. 166-193 க்கு இடைப்பட்டக் காலமாக இருத்தல் வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். இது ஒரு தொடர் கட்டுரை].

5. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[- 13 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ப்பொழில் அதன் வளர்ச்சிக்கு உதவிய எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி கூறுகிறது
- 1937 ஆண்டின் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது, வரவிருக்கும் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் குறித்த திட்டங்கள் விவாதத்தில் உள்ளது
- 1937 ஏப்ரல் 6, 7, 8 இல் தஞ்சையில் நடந்த அறிஞர்கள் மாநாட்டில், "காங்கிரஸ் கட்சி அரசியல் தலைவரின்" தலைமையில், இந்தியைத் தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக்கி கற்பிக்க எடுத்த முடிவை கரந்தைத் தமிழ்ச் சங்கம் எதிர்க்கிறது.    இந்தியாவில் கற்றோர் எண்ணிக்கை 10% என்பதையும் குறிப்பிட்டு, இம்முடிவு தமிழகத்தின்  கல்வி வளர்ச்சிக்கு இடையூறு என்று கூறி, அரசியல் தலைவரின் பேதைமையையும், தமிழரின் அடிமை மனப்பான்மையையும் கண்டிக்கிறது].

6.   நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[- ஈழகேசரி வாரஇதழ் தமது தமிழ் வளர்சிப்பணியின் மற்றொரு முயற்சியாக வெளியிட்டுள்ள "ஆண்டு மடல்" இதழின் சிறப்பு பாராட்டப்படுகிறது
- சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவாக, ஈழகேசரியின் ஆசிரியர் நா. பொன்னையா அவர்கள்  வெளியிட்டுள்ள "தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும், நச்சினார்க்கினியர் உரையும்" பதிப்பு பாராட்டப்பட்டுள்ளது].

7. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகளுக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.
இதழாசிரியர்
[கரந்தைத் தமிழ்ச் சங்க அமைப்பின் கல்லூரி, மருத்துவசாலை, வெள்ளிவிழா திட்டங்களுக்கு நன்கொடை அளித்தோர்  பெயர், நன்கொடைத் தொகை குறிப்பிடப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது].
________________________________________________

Thursday, December 1, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 12

வணக்கம்.

துணர்: 12 - மலர்: 12  (1936-1937) வெளியீடான  தமிழ்ப் பொழில் இதழ்,
மின்னிதழாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)   துணர்: 12 - மலர்: 12

________________________________________________________________

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

1. நன்னனும் பரணரும், (தொடர்ச்சி ...) - ஔவை சு. துரைசாமிப்பிள்ளை.
2. கல்லாட நூலாராய்ச்சி (தொடர்ச்சி ...) - E.R. நரசிம்மஐயங்கார்
3. தில்லையுலா - L. உலகநாத பிள்ளை
4. கடிமர யானை - சிறு நாடகம் - கு. நா. சுந்தரேசன்
5.  நூல் மதிப்புரை - இதழாசிரியர்
6. தமிழ்ச் செய்திகள் - இதழாசிரியர்
7. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.
8. நூல்: சித்தரந்தாதி - மூலமும் உரையும் (இணைப்பு)
9. நூல்: நெல்லை வருக்கக் கோவை (இணைப்பு)

வாசிக்க இங்கே செல்க!

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
________________________________________________

விரிவான உள்ளடக்கம் ...
1. நன்னனும் பரணரும் (தொடர்ச்சி ...)
ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
[நன்னன் என்பவன், சேரன் செங்குட்டுவன்  காலத்திற்குச் சற்றே பிற்காலத்தில், சேரநாட்டின் ஒரு  குறுநிலப்பகுதியான கொங்குப் பகுதியை  ஆட்சி செய்த வேளிர் குல மன்னன்.

கட்டுரையின் இப்பகுதியில் நன்னனின் நகரங்களுள் ஒன்றான ஆஅய் பிரம்பு குறித்த அகநானூற்றுப் பாடல் (356), பாழி நகரம் குறித்த அகநானூற்றுப் பாடல்கள் (258, 372), நன்னன் வேந்தர் பலரை வென்று, அவர் மகளிர் கூந்தலை கயிறாகத் திரித்து அருங்கலம் கொணர்ந்ததைக் கூறும் நற்றிணை பாடல் (270), அவன் பெண்கொலை செய்து தீராப்பழியைப் பெற்றதைக் கூறும் குறுந்தொகைப் பாடல் (292), படைத்தலைவன் மிஞிலி யின் தந்தையின் கண்களைக் குருடாக்கிய கோசர்களை வென்றதைக் கூறும் குறுந்தொகைப் பாடல் (73), ஆகிய பரணரின் பாடல்கள் வழி நன்னனது வரலாற்றைக் கூறுகிறார் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை].

2. கல்லாட நூலாராய்ச்சி (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்மஐயங்கார்
[அரிகேசரி என்னும் கூன்பாண்டியனின் குறிப்பு,  மலைநாடென சேரநாட்டுப் பகுதியைக் குறிக்கும் சொல் பயன்பாடு,  கோவிலில் கல்மதில் அமைப்புகள்  எழுப்பப்பட்ட காலம், தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் பற்றிய குறிப்பு, கிரந்த எழுத்துக்கள் பற்றிய செய்தி, தன்மைப்பெயர்கள் பயன்பாடு, வடமொழிச்சொற்கள் பயின்று வருதல் ஆகிய பற்பல இலக்கியக் குறிப்புகளை எடுத்துக்காட்டி திருவிளையாடல் கதைகள் காலந்தோறும் தோன்றின.  வடமொழியில் தொகுக்கப்பட்ட திருவிளையாடல் நூலும், கல்லாடமும் 11 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நூல்களல்ல என்றும், மாணிக்க வாசகர் 9 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவரல்லர் என்றும், கல்லாடம் 6 ஆம் நூற்றாண்டு நூல் எனக் கருதுவது தவறு எனவும் விளக்குகிறார் நரசிம்மஐயங்கார்]

3. தில்லையுலா
L. உலகநாத பிள்ளை
[தில்லை நடராஜரின் திருவீதி உலாவில் ஆடலரசனைக் கண்டு ஏழுவகை  வயத்துப்பிரிவு மகளிரும் சிவன் மீது கொண்ட காதலை விளக்கும், பிரபந்த வகைகளில் ஒன்றான உலா பாடல்கள்.  ஆசிரியர் பெயர் அறியக்கூடவில்லை.  வேறுபிரதிகளும் ஒப்புநோக்கக் கிடைக்காத பொழுது, கிடைத்த பாடல்கள் செல்லரித்துப் போகும் முன்னர் பாதுகாக்கும் நோக்கில் இதுவரை அச்சில் ஏறாத இந்த தில்லையுலா பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது, இப்பகுதி தொடரும்]

4. கடிமர யானை - சிறு நாடகம்
கு. நா. சுந்தரேசன்
[இரவலர் அளித்த பரிசில்! (பாடல் 162) என்ற புறநானூற்றுப் பாடலினை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட்ட நாடகம். புலவர்  பெருஞ்சித்திரனார், தனது தகுதிக்கேற்ற பரிசு கொடுக்கத் தவறிய இளவெளிமான் தந்த பரிசிலைப் புறக்கணித்து வள்ளல்  குமணனிடம் சென்று பாடி பரிசில் பெறுகிறார்.  இளவெளிமானின் நாட்டுக்குத் திரும்பி குமணன் தனக்கு வழங்கிய கொடையான யானையை   இளவெளிமானின்  காவல் மரத்தில் (கடிமரம் = காவல் மரம்)  கட்டி அதனைத் தனது பரிசாக  இளவெளிமானுக்கு அளித்து  'நின்ஊர்க் கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த நெடுநல் யானைஎம் பரிசில்' எனக் கூறி புத்தி புகட்டிய நிகழ்வு  நாடக வடிவெடுத்துள்ளது]

5.  நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட, இராவ் சாகேப் வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் எழுதிய  'கம்பராமாயணம் - பாலகாண்டம்' உரைநூல் மதிப்புரை பெற்றுள்ளது]

6. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழறிஞர்  C. R. நமசிவாய முதலியார் படத்திறப்பு விழா நடைபெற்றது. பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் தமிழ்ப் புலவர்களை பிற பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களை (Lecturer) அழைப்பது போலவே 'சொற்பொழிவாளர்' எனக் குறிப்பிட வேண்டும் என்றும் அவர்கள் ஊதியமும் அவர்களுக்கு இணையாக வழங்கப் பட வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை ஆட்சிக் குழுவினரால் (இலட்சுமணசாமி முதலியார் முன்வைத்த விளக்கத்தினை ஏற்றுக் கொண்டு) நிராகரிக்கப்பட்டது.

7. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

8. நூல்: சித்தரந்தாதி - மூலமும் உரையும்
ஆசிரியர்: சித்தர்
வெளியீடு: தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து வெளியீடு - 12
பதிப்பகம்: கூட்டுறவுப் பதிப்பகம், தஞ்சை
ஆண்டு: 1936
பக்கங்கள்: 14
நூல் அறிமுகம்:
இந்த நூல் திருவானைக்காவல் கோயில் நாயகியான அகிலாண்ட அம்மையின் மீது எழுதப்பட்ட தோத்திரப்பாடல்களாக, கலித்துறையால் அமைந்த 22 பாடல்களைக் கொண்டமைந்துள்ளது. இந்த நூலை எழுதிய சித்தரின் ஊர், மரபு முதலிய வரலாறோ, இப்பாடலுக்கு உரை எழுதியவர் வரலாறோ அறியக்கூடவில்லை. இதனை செம்பரம்பாக்கம் கறுப்ப முதலியார் மகன் ஆறுமுகம் என்பவர் ஏடுகளில் எழுதி வைத்தார் என்ற குறிப்பு மட்டும் கிடைத்துள்ளது.

தஞ்சை சரபோஜி மன்னரின் சரசுவதிமகால் நூலகத்தின் இந்த நூல், பக்கத்திற்கு 5 வரிகளாக 20 ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு, நூலகத்தின் 129 ஆவது எண் கொண்ட ஓலைச்சுவடியென இடம் பெற்றுள்ளது. தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக 1936 ஆண்டில்  இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தமிழ்ப் பொழில் இதழில் இது ஒரு இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 

9. நூல்: நெல்லை வருக்கக் கோவை
ஆசிரியர்: அம்பிகாபதி
வெளியீடு: தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து வெளியீடு - 11
பதிப்பகம்: கூட்டுறவுப் பதிப்பகம், தஞ்சை
ஆண்டு: 1936
பக்கங்கள்: 20
நூல் அறிமுகம்:
இந்த நூல் "நெல்லைமாலை" என்றும் அழைக்கப்படும். திருநெல்வேலியில் கோயில் கொண்டுள்ள நெல்லைநாதர் இந்த நூலின் பாட்டுடைத் தலைவர். அகப்பொருளில், மொழியின் முதலாம் வருக்க எழுத்துக்கள் ஒவ்வொரு காரிகையின் முதலெழுத்தாய் அமையுமாறு தொடுக்கப்பட்ட செய்யுள்களைக் கொண்டமைந்துள்ளது இதன் சிறப்பு, 98 செய்யுள்களில் கதை சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நூலின் ஆசிரியர் பாண்டிய நாட்டின் வீரையில் (வேம்பத்தூரில்) ஒரு வேதியர் குலத்தில் பிறந்தவர் என்பதை இந்நூலின் கடைசிச் செய்யுள் கூறுகிறது.

தஞ்சை சரபோஜி மன்னரின் சரசுவதிமகால் நூலகத்தின் இந்த நூல், பிழை திருத்தப்பட்டு செப்பனிடப்பட்டு, தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக 1936 ஆண்டில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தமிழ்ப் பொழில் இதழில் இது ஒரு இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 
________________________________________________