Saturday, April 2, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 11 & 12

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 11 & 12 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிடப்பட்ட பதிவு **
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 11 & 12
________________________________________________
இதழாசிரியர்: கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை

1. இளவேனிற் காலத்து இன்பமாலை
-- இதழாசிரியர்
[இளவேனில் மாலை இன்பம் குறித்து இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள்]

2. ஒரு பெரும் மகிழ்ச்சி
-- இதழாசிரியர்
[உமா - செல்வம் ஆகியோருக்குத் தஞ்சை நாட்டாண்மைக் கழகத்தில் பாராட்டு, மற்றும் உருவத் திறப்புவிழா எடுத்தமைக் குறித்து மகிழ்ச்சி ]

3. சர். சிவஞானமும், தமிழ்ப் பல்கலைக்கழகமும்
-- திராவிடன்
[சர். சிவஞானம் கொடுத்த விளக்கம்]

4. தமிழர் வீரம்
-- சா. சிதம்பரன்
[தமிழர்களின் உண்மையான வீரம் என்பது என்ன? கட்டுரையாசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க இதழாசிரியர் மாற்றம் செய்யாது வெளியிட்ட இலக்கியத் தொடர் கட்டுரைத் தொடர்]

5. தமிழக வரலாறு  (தொடர்ச்சி ...)
-- ப.மு. சிதம்பர முத்தரையர்
[குமரி கண்டம் குறிப்பு, மனித இனத்தின் தோற்றமும் வளர்ச்சியும், ஐவகை நிலங்களும் வாழ்வும்] 

6. சிறுமறை (குட்டிக்குறள்)
--சுகவனம் சிவப்பிரகாசன்
[தமிழ் பயிலும் மாணவருக்குப் பாடத்தில் திருக்குறள் இல்லாநிலைக்கு வருத்தம், இரண்டடிக் குறளை ஓரடியில் சொல்லும் ஒரு முயற்சி; 'கசடறக் கற்றுத் தகநிற்பதழகு" ]

7.  கலிங்கத்துப்பரணியாராய்ச்சி - விளக்கம்
-- மு. இராகவையங்கார் 
[மு. இராகவையங்கார்  அவர்கள் ஆசிரியருக்குக் கூறும் தன்னிலை விளக்க மடல்]

8. நக்கீரர் - ஒரு நாடகம்  (தொடர்ச்சி ...)
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர் -- முடிவுறுகிறது]

9. ஒரு குறட்பா
-- பண்டிதர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்
["நத்தம்போற் கேடு உளதாகும் சாக்காடும்" புகழ் அதிகாரத்துத் திருக்குறளுக்கு விளக்கம்]

10. வள்ளுவர் கலித்துறை
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்
[திருக்குறள் அதிகாரங்களின் தலைப்பில் செய்யுள்கள்]

11. ஒரு விண்ணப்பம்
-- கந்தசாமியார்
[விலங்குகளை வதைக்க வேண்டாம் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்படுகிறது]

12. மத்தியகாலச் சோழர் வரலாறு  (தொடர்ச்சி ...)
-- திரு. சோமசுந்தர தேசிகர்
[சோழ அரசர் பரம்பரை பற்றிய கட்டுரைத் தொடர் வரிசையின் தொடர்ச்சி ... இக்கட்டுரையில் விஜயாலயச் சோழன் முதற்கொண்ட சோழ வரலாறு]

13. சங்க நிகழ்ச்சி
-- உமா. பஞ்சாபகேசன்
[நிகழ்ந்த சங்கப் பொதுக்கூட்டங்கள் பற்றிய சிறு குறிப்புகள் (விழாக்கள் மாலை 27 1/2 நாழிகைக்குத் தொடங்கின (?) ;  புகழ் பெற்ற தமிழறிஞர்களின் உரைகள் இடம் பெற்றுள்ளன;  கல்லூரி நிகழ்ச்சிகள்]

14. மாணவர் பக்கங்கள் - நிலாப்பாடம்
-- ?? கட்டுரை ஆசிரியர் கொடுக்கப்பெறவில்லை
[ஆசிரியர் மாணவர் உரையாட முறையில், இலக்கியங்களில் காணப்பெறும் வானியல் செய்திகள் கொடுக்கப்படுகின்றன]

15. கடிகாரம் வருமுன் கால அளவு
-- இதழாசிரியர்
[பண்டையக்காலக் காலக் கணக்கிடும் முறை படங்களுடன் விளக்கம்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, April 1, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 10

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 10 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 10
________________________________________________
இதழாசிரியர்: கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை

1. தமிழ்ப் பல்கலைக்கழகம்
-- இதழாசிரியர்
[ தமிழ்ப் பல்கலைக்கழகம்  அமைப்பதன் தேவையை வலியுறுத்தும் தலையங்கம்]

2. தமிழ்ப் புலவருக்கு மாநிலவளாக அறிவு
-- அ. கந்தசாமிப் பிள்ளை
[தமிழறிஞர்களுக்கு புவியியல் அறிவு (மாநிலவளாக அறிவு) இன்றியமையாதது.  அது இல்லாததற்குச் சான்று புகழேந்தியாரின் நளவெண்பாவில்  நிடத நாட்டில் இருந்து அயோத்தி செல்லும் பொழுது வழியில் கடல் இடைப்பட்டதாக வரும்  குறிப்பு ... போன்ற விளக்கங்கள் ]

3. ஆளுடைய நம்பிகள் திருப்பாட்டு
-- மு. வே. மா. வீ. உலகவூழியன்
[பெரிய புராணம் காடும் சுந்தரர் பற்றிய கட்டுரை]

4. நக்கீரர் - ஒரு நாடகம்  (தொடர்ச்சி ...)
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர்]

5. தமிழ்த்தாய் வாழ்த்து
-- மு. வே. மா. வீ. உலகவூழியன்
[தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்]

6. கலிங்கத்துப்பரணியாராய்ச்சி - விளக்கம்
-- அ. கோபாலையர்
[முன்னர் வெளிவந்த மு. இராகவையங்கார்  அவர்களின் கலிங்கத்துப்பரணியாராய்ச்சி விமர்சனக் கருத்துகளுக்கு   அ. கோபாலையர் விளக்கம் கூறுகிறார். இதழாசிரியரின், கூற்றுப்படி, இது ஒரு பொருட்போர்]

7. புகழுடம்பு பெற்றவர்
-- சாமி. சிதம்பரன்
[தமிழ்ப் புலவர்களின் சிறப்பு]

8. ஓரி
-- T.V.  சதாசிவப் பண்டாரத்தார்
[இலக்கியத்தில் வல்வில் ஓரி குறிப்புகள்] 

9. இந்தியத்தாய் தன் மக்கட்கு உரைப்பது
-- T.V. இரத்தினசாமி
[சந்தப்பாடல்]

10. சங்ககாலத்துச் சோழ அரசர் பரம்பரை (தொடர்ச்சி ...)
-- திரு. சோமசுந்தர தேசிகன்
[உறந்தை, புகார்ச் சோழர்கள் பற்றிய தகவல்கள்]

11. நமது பொழில்
-- இதழாசிரியர்
[இதுவரை பொழிலில் கட்டுரை எழுதி வந்தவர்களைப் புலவர் குழுவில் பங்கு பெற்றுத் தொடர்ந்து எழுத அழைப்பு வைக்கப்படுகிறது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, March 31, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 9

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 9 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 9
________________________________________________

1.  மகிழ்ச்சி
-- இதழாசிரியர்
[ T.N. சிவஞானம் பிள்ளை, R. கிருஷ்ணராவ் பான்சலே , வெ.பெ.  சுப்ரமணிய முதலியார் ஆகிய தமிழறிஞர்கள், முறையே,  சர், இராவ் பகதூர், இராவ்சாகேபு பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள்]

2. ஏறு தழுவுதல் (தொழுமாடு பிடித்தல்)
-- இதழாசிரியர்
[இலக்கியங்களில் ஏறுதழுவுதலுக்குச் சான்றுகள் கொடுக்கும் விரிவான கட்டுரை ]

3. தமிழ்நாட்டுக் கல்வி
-- பண்டிதர் அ. கோபாலையர்
[முன்னர் வழக்கில் இருந்த 'அரிச்சுவடி'  கல்விமுறை பற்றிய விளக்கம் தரும் கட்டுரை, இதழ் வெளிவந்த காலத்தில் (1926)  கல்வியின் தரம், மாணவரின் தரம் குறைந்ததென்ற புலம்பல்!!! ]

4. கட்டுரை எழுதுதல் (கட்டுரை = வியாசம்)
-- இதழாசிரியர்
[கட்டுரை எழுதுதலைக் கற்பித்தற்கு உரியார் யார், தாய்மொழிப் பயிற்சி இன்மையால் தமிழ்க்கல்வி குறைந்தது, கட்டுரை எழுதும் பயிற்சி உதவலாம்,  பள்ளியில் 8, 9 வகுப்புகளில் தொடங்கல் வேண்டும்]

5. நக்கீரர் - ஒரு நாடகம்  (தொடர்ச்சி ...)
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர்]

6. தமிழர் வரலாறு - முதல் பாகம் - கி. மு. 450 வரையில்
-- ப.மு. சிதம்பர முத்தரையர்
[தமிழகத்தில் பட்டப்பெயர்கள் சாதிகளாக உருவெடுத்தது பற்றிய விளக்கம் (பக்கம் - 320), நாடு முன்னேற்றம் அடைய மக்கள்  தங்கள் வரலாற்றை அறிந்திருக்க வேண்டும், கடல் கோள் காலம் பற்றிய குறிப்புமுண்டு] 

7. திருவாசகச் சிற்றாராய்ச்சி (தொடர்ச்சி ...)
-- இராவ்சாகிபு சு. வி. கனகசபைப்பிள்ளை
[திருவாதவூரர் காலம் - மாணிக்கவாசகர் காலம் பற்றிய குறிப்பு தொடர்கிறது]

8. கலிங்கத்துப்பரணியாராய்ச்சி
-- மு. இராகவையங்கார்
[முன்னர் வெளிவந்த அ. கோபாலையன் அவர்களின் கலிங்கத்துப்பரணியாராய்ச்சி மறுப்பு கட்டுரையின் மீது விமர்சனம், இதழாசிரியரின், எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்க வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் வெளியிடப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, March 30, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 8

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 8

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 8 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 8
________________________________________________

1. முன்னுரைக் குறிப்பு
-- இதழாசிரியர்
[தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம்- 14 ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் ஆற்றிய தலைமையுரையின் கருத்துத் தொகுப்பு, தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்றும், ஆங்கில மொழி பெயர்ப்புக் கழகம் ஒன்றும் தேவை]

2. முன்னுரை  (தலைமையுரை) -  இணைப்பு
-- பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்
[தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம்- 14 ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் ஆற்றிய தலைமையுரை - 30 பக்கங்கள்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, March 29, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 7

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 7 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 7
________________________________________________

1. "குடம்பை" என்னுஞ் சொல்லுக்கிட்ட வயிரக் குப்பாயம்
- B. S. இரத்தினவேலு முதலியார்
[குடம்பை தனித்தொழிய - குறள் விளக்க உரை]

2. தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம்- 14 ஆண்டுவிழா நிகழ்ச்சி
-- இதழாசிரியர்
[பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் தலைமை, ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்குக் கோ-பற்று கூறி விழா துவங்கியுள்ளது !!, வித்துவான் படிப்பிற்கு, நுழைவுத் தேர்வு பற்றிய முன்மொழிவுகள்]

3. பொன்னியாற்றின் போற்றிச் சிலேடைப் பதிகம் (ஆண்டுவிழா நிகழ்ச்சி)
-- வே. முத்துசாமி ஐயர்
[காவிரியுடன், சிவன், உமாதேவி, திருமால், இலக்குமி எனப் பலரை இணைத்துப் பாடப்பட்ட சிலேடைச் செய்யுள்கள்]

4. கலிங்கத்துப்பரணியாராய்ச்சி மறுப்பு
--அ. கோபாலையன்
கலிங்கத்துப்பரணியாராய்ச்சி பற்றிய குறிப்புகள்]

5.  சீத்தலைச் சாத்தனார்  (தொடர்ச்சி ...)
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை
[ஊரும், மரபும்]

6.  ஒலோகமாதேவீச்வரக் கல்வெட்டு  (தொடர்ச்சி ...)
-- L. உலகநாதம் பிள்ளை
[இராஜராஜ சோழன் மனைவி உலகமாதேவி எடுப்பித்த  கோயிலின், நன்கொடை பற்றிய விரிவான  கல்வெட்டு]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, March 28, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 6

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 6 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 6
________________________________________________

1. ஒலோகமாதேவீச்வரக் கல்வெட்டு
-- L. உலகநாதம் பிள்ளை
[இராஜராஜா சோழன் மனைவி உலகமாதேவி எடுப்பித்த  கோயிலின், நன்கொடை பற்றிய விரிவான  கல்வெட்டு]

2. தமிழ் எழுத்துக்கள் - தொல்காப்பியம் (தொடர்ச்சி ...)
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்
[தொல்காப்பியத்தில் எழுத்து: விளக்கம்]

3. திருத்தக்கதேவர் கவித்திறம்
E. S. வரதராச ஐயர்
[சீவகசிந்தாமணி இலக்கிய நயம் பாராட்டல்]

4.  திருவாசகச் சிற்றாராய்ச்சி
-- இராவ்சாகிபு சு. வி. கனகசபைப்பிள்ளை
[திருவாதவூரர் காலம் - மாணிக்கவாசகர் காலம் பற்றிய குறிப்பு]

5. சிலப்பதிகார நாடகத்து ஒரு பகுதி
-- இதழாசிரியர்
[சங்கத்தின் 14 ஆண்டுவிழாவில், மாணவர் நாடகத்திற்காக எழுதப்பட்ட சிலப்பதிகார நாடகம்]

6. ஆண்டுவிழாவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி
-- சங்கத்தலைவர்
[நன்கொடையளித்த திருப்பனந்தாள் மடாலயத்திற்கு நன்றி]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, March 27, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 5

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 5 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 5
________________________________________________

1. பேராசிரியர் உரைக்குறிப்பு  (தொடர்ச்சி ...)
-- இதழாசிரியர்
[தொல்காப்பியம்: சொல்லதிகாரம் - பேராசிரியர் தெய்வச்சிலையாருரை
கரந்தைச் தமிழ்ச் சங்க வெளியீடாக ... ]

2. சீத்தலைச் சாத்தனார்
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை
[சீத்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர், பெயர் விளக்கம்]

3. நற்றாயும், செவிலித்தாயும்
-- இதழாசிரியர்
[நாடகம்: நற்றாய் = நமது தாய்நாடு, செவிலித்தாய் = ஆங்கிலக் கல்லூரி]

4. திருக்குறளுறை ஆராய்ச்சி
-- கந்தசாமியார்
[கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் - உரை]

5. தமிழ்ப் பல்கலைக்கழகம்
-- சி. வேதாசலம்
[தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டிய தேவையை முன்வைக்கும் கட்டுரை]

6.  மாணவர் விடைகள்
-- இதழாசிரியர்
[புதிர் வினாக்கள் தொகுப்பு]; மு------ன்:- தூக்கம் விளைவிக்கும் அறிய மருந்து, பண்டிதர்களிடம் விளையின்றிக் கிடைப்பது ...போன்றவை]

7. நூலாராய்ச்சி
-- சா. சிதம்பரன்
[நூலாய்வு செய்வோருக்குத் தேவையான பண்புகள்; ஆராய்ந்தெழுதும் அரும்பொருள்களை எல்லோரும் உணர்ந்து கொள்ளத்தக்க எளிய மொழியில் எழுதுதல் சாலவும் நன்று ]

8. திருப்புறம்பியத்துக் கல்வெட்டுகள் (தொடர்ச்சி ...)
-- T.V.  சதாசிவப் பண்டாரத்தார்
[இராஜராஜ சோழனின் கல்வெட்டுத் தகவல்கள்]

9. மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபை
--வ. பழ. சா. சாமிநாதன் செட்டியார், சன்மார்க்க சபைத் தலைவர்
[உ. வே. சா. தலைமையில் நடந்த விழா பற்றிய செய்தி, இவ்விழாவில் மு. கதிரேசன் செட்டியார் 'பண்டிதமணி' பட்டமும், ரா. இராகவையங்கார் 'மகாவித்வான்' பட்டமும் பெற்றனர் ]

10. நமது மகிழ்ச்சி
-- இதழாசிரியர்
[பட்டமளிப்பு விழாவிற்குப் பாராட்டுகள்]

11. தமிழ்ப் பொழில் வாழ்த்து
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[செய்யுள்]

12. நக்கீரர் - ஒரு நாடகம்  (தொடர்ச்சி ...)